வீடு ரெண்டுபட்டால் பங்காளிக்கு கொண்டாட்டம் என சொல்வார்கள், அப்படித்தான் ஆகியுள்ளது இன்றைய அரசியல் நிலவரம், நேற்று மாலை வெளியான ஒரு ஆடியோவில் தினகரனை அசிங்க அசிங்கமாக அதாவது பீப் சவுண்டு போட்டு சொல்லும் அளவிற்கு நாறடித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். இந்த பேச்சு அதிமுகவினர் மட்டுமல்ல தினகரனின் தாய்மாமன் திவாகரனுக்கு இது குஷியான செய்தியாக அமைந்துள்ளது. 

இந்த ஆடியோ விவகாரம் பற்றி ஏறிய தொடங்கியதும் ஸீனுக்குள் வந்த திவாகரன் ஆதரவாளர் கர்ணன்,  ஆர்.கே.நகரில் பொய் பிரச்சாரம் செய்துதான் தினகரன் வெற்றி பெற்றார். நான் உள்பட பலர் அங்கு பிரச்சாரம் செய்தோம். தினகரனை நம்பி யாரும் ஓட்டுப்போடவில்லை. சசிகலாவுக்காக தான் ஆர்.கே.நகரில் வேலை பார்த்தோம். அங்கு தினகரன் யார்ன்னே தெரியாது. தினகரன் ஒரு பச்சை சுயநலவாதி. அதான் நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகு  தாய் கழகமான அதிமுகவுக்கு சென்றுள்ளார்.   ஆனால் திமுகவுக்கு செல்லக்கூடாது என்று நினைக்கிறேன். தேனியில் சிங்கம் தங்க தமிழ்செல்வன். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து வெளியே வந்தால் அமமுக சுத்தமாக அழியப்போகிறது. 

இந்த ஆடியோவை நிச்சயமாக தங்க தமிழ்செல்வன் வெளியிட்டிருக்க மாட்டார்.  அவருக்கு சூதுவாது தெரியாது. அவருக்கு நல்ல மனசு நான் நல்லவன், உங்களை மாதிரி அரசியல் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார் பாருங்க. அதிமுக ஒன்று சேரும். தினகரன் தனிமரமாவார். தினகரனால் ஒன்றுமே பண்ண முடியாது.  அங்கு இருக்கும் நிர்வாகிகள் வெளியே வரப்போகிறார்கள். வெற்றிவேல் விரைவில் காங்கிரஸ்க்கு போகிறாராம். அவர் போகட்டும். அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் தாய் கழகம்.  

தேனி தினகரனின் கோட்டை என்று சொல்லுவது பச்சை பொய். தேனி மட்டுமல்ல  மட்டுமல்ல திண்டுக்கல், மதுரை என தென் மாவட்டங்கள்  தங்க தமிழ்செல்வனின் கோட்டை அவருக்கு,  செல்வாக்கு இருக்கிறது. 

அடிக்கடி சசிகலாவின் அறிவுரையின் பேரில், அறிவிப்பின் பெயரில் என்று தினகரன் சொன்னது அண்டப்புளுகு, தினகரன் சுதாகரனை தான் சந்திக்கிறார். சசிகலா, தினகரனை சந்திக்க விரும்பல. சசிகலாவை ஜெய் ஆனந்த் தான் சந்திக்கிறார். ரொம்ப நாள் சந்திக்க வில்லை. இப்போது தான் சந்தித்துள்ளார். அப்போது சில விவரங்களை சசிகலா கூறியுள்ளார். கூடிய சீக்கிரம் சசிகலா வெளியே வருவார். சசிகலா வெளியே வந்தால் தினகரன் ஓடிபோய் ஒளிந்துகொள்ள வேண்டியதுதான். தினகரன் மேல பயங்கர கோபத்தில் உள்ளார் சசிகலா எனக் கூறியுள்ளார்.