தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மாவட்ட வாரியாக எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்று பார்ப்போம். 

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

சில தொகுதிகளில் மின்னணு வாக்கு இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தாமதமானது. எனவே சில வாக்குச்சாவடிகளை தவிர மற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் காலை முதல் வாக்களித்துவருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.8% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

காலை 9 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23% வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 9.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மற்ற மாவட்டங்களில் பதிவான வாக்குகளை பார்ப்போம்.

சென்னை - 10.58%

திருவள்ளூர் - 12.28%

சிவகங்கை - 12.90%

மதுரை - 13.56%

விருதுநகர் - 15.04%

ராமநாதபுரம் - 12.50%

வேலூர் - 12.74%

கோவை 14.65%

திருவண்ணாமலை - 14.97%

காஞ்சிபுரம் - 14.80%

திருப்பூர் - 13.66%

தருமபுரி - 15.29%

கடலூர் - 13.68%

கரூர் 16.46%

திருச்சி - 14.03%

தேனி - 14.06%

குமரி - 12.09%

சேலம் - 15.76%

நாமக்கல் - 16.55%

நீலகிரி - 12.39%

ஈரோடு- 13.97%