Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் நிலவும் பரபரப்பாம அரசியல் சூழல்... நாளை கூடுகிறது ஈபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!!

எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

district secretaries meeting of edapadi palanisamy team will meet tomorrow
Author
First Published Dec 26, 2022, 6:18 PM IST

எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமான நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய விவாதம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பாஜக தயாராகி வரும் நிலையில் பிளவுபட்டு இருக்கும் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார்.… திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!!

இதுக்குறித்து எடப்பாடி பழனுசாமியிடம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. காரணம் எடப்பாடி பழனிசாமி அணியில் தான் அதிமுகவின் அதிகப்படியான நிர்வாகிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மொடி மற்றும் அமித்ஷாவின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தெரிகிறது. அது குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி பதவி ஏற்பு விழாவை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்ததை வைத்து தெரிந்துக்கொள்ள முடிகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் பதிவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பாஜக தலைவர்களும் சிறப்பான வரவேற்பளித்தது எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

இதனிடையே கடந்த வாரம் சென்னையில் தனது அணியின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்டிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளதோடு, அதில், கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் என பிளவுபட்டு கிடக்கும் அதிமுக ஒருபுறம் என்றால் மறுபுறம் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாஜக என தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios