2021 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம், சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்து  அதிமுக தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவுக்கு கிராமங்களில் கணிசமான ஓட்டுவங்கி எம்ஜிஆர் காலத்தில் இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் ஓரளவு தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அதன் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கிராமப்புறங்களில் அதிமுக ஓட்டு வங்கி அதலபாதளத்திற்கு சென்றது.  இதனால், 12,617 ஊராட்சி செயலாளர் பதவிகள் கட்சித்தலைமை காலி செய்வதாக கடந்த 19ம் தேதி அக்கட்சியின் தலைமை அறிவித்தது. 

இதையடுத்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள, அதிமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளையும் மாற்ற கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம், சில மாவட்டச் செயலாளர்களை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள், 2021 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.