Asianet News TamilAsianet News Tamil

பல இடங்களில் சூர்யா ரசிகர் மன்றங்கள் கலைப்பு.. ! பாட்டாளி இளைஞர்கள் ஆவேசம்

இது குறுத்து ஒருவர் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், முதிர்ச்சியான தலைமை, ராணுவம் போன்ற தொண்டர்கள்; என்று துவங்கப்பட்ட போது தமிழகத்தில் நம்பிக்கை ஊட்டிய பாமக, சமீப காலங்களில் வன்னிய மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்வதும், உணர்ச்சிவசப்பட்ட தலைவர், 

Dissolution of Surya fan forums in many places .. ! Patali youth obsession
Author
Chennai, First Published Nov 18, 2021, 12:33 PM IST

நடிகர் சூர்யா ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவு படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து வடமாவட்டங்களில் வன்னிய இளைஞர்கள் சூர்யாவின் ரசிகர் மன்றங்களை கலைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடலூரில் நடைபெற்றுள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Dissolution of Surya fan forums in many places .. ! Patali youth obsession

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதி இருந்தார், அதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யா எழுதியிருந்த கடிதத்தில் அன்புமணிக்கு அட்வைஸ் செய்வது போல வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளித்துப் போன பாமகவினர், சூர்யாவை தாக்குபவர்களுக்கு  ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுமென பேட்டி கொடுக்க தொடங்கினர். பாமகவினர் நடிகர் சூர்யாவை கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடத்திவருவதுடன், அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவிட்டு  வருகின்றனர். சூர்யா பாமக இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்புக்கு இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dissolution of Surya fan forums in many places .. ! Patali youth obsession

இந்நிலையில் பாமக சூர்யாவை வேண்டும் என்றே அரசியல் லாபத்திற்காக வம்புசெய்கிறது என்று பவரும் விமர்சித்து வருகின்றனர். வன்னிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அக்காட்சியின் தலைமை செயல்பட்டு வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகளும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமகவினர் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினையைத் நாளுக்குநாள் பூதாகரமாக மாறிவரும் நிலையில் பாமக செல்வாக்கு நிறைந்த பகுதிகளான வடமாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் சூர்யாவுக்காக வன்னிய இளைஞர்கள் இணைந்து நடத்திவந்த ரசிகர் மன்றங்களை அவர்கள் கலைத்து தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். சூர்யாவின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தியும் அதை தாக்கியும் தங்களது கண்டனத்தை வன்னிய இளைஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கான  வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது இதை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். 

"

இது குறுத்து ஒருவர் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், முதிர்ச்சியான தலைமை, ராணுவம் போன்ற தொண்டர்கள்; என்று துவங்கப்பட்ட போது தமிழகத்தில் நம்பிக்கை ஊட்டிய பாமக, சமீப காலங்களில் வன்னிய மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்வதும், உணர்ச்சிவசப்பட்ட தலைவர், ஒருவர் தன் இனத்தின் சிறு திரளான இளைஞர்களை வைத்து துவக்கிய விடுதலைச் சிறுத்தைகள் ஆரம்பத்தில் தடுமாற்றப் பாதையில் சென்றாலும், தற்போது அரசியல் படுத்தப்பட்ட இயக்கமாக பரிணமித்து இருப்பதும் காலம் காட்டும் உண்மை; இதை என் வன்னிய சகோதரர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். மருத்துவர் ஐயாவும், அவரது மகன் அன்புமணியும் உங்களை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை வன்னியர் அல்லாத என் போன்றவர்களுக்கு இல்லை. உங்கள் அறிவு ஆயுதத்தை தீட்டுவதற்கு பதிலாக உங்களையே ஆயுதம் ஆக்குகிறார்கள்; கவனமாக இருந்து அரசியல் செய்யுங்கள் என கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios