அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தினகரன் கூடாரத்தை கலக்கமடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.ஏ.ஏக்கள் சசிகலாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தினகரன் கூடாரத்தை கலக்கமடையச் செய்துள்ளது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வருகின்றனர். 

டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக கருதப்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது அமமுகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மேலும் சில தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை செந்தில் பாலாஜி திமுக அணிக்கு இழுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக ஒரு பக்கம் தூண்டில் போட்டு வரும் நிலையில், அதிமுகவும் மறுபுறம் தூண்டில் போட்டு வருகிறது. இதனால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அமமுக, மீதமிருக்கும் ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 இந்நிலையில், டிடிவி தினகரனின் தலைமையில் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், கோதண்டபாணி, கதிர்காமு, உமா மேஸ்வரி, பார்த்திபன், ஏழுமலை  உள்ளிட்ட 9 எம்எல்ஏ-க்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்த்தித்து வருகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியை தவிர 17 பேர் உள்ள நிலையில் 9 பேர் மட்டுமே சசிகலாவை சந்தித்து வருகின்றனர். 

பரபரப்பான முக்கியத்துவம் வாய்ந்த வேளையில் மீதமுள்ள 8 பேர் சசிகலாவை சந்திக்கச் செல்லாதது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது. அந்த 8 பேரும் தற்போது தினகரனின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் கூறப்படுகிறது. தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எம்.ஏ-க்களின் பலம் தற்போது பாதிக்குப்பாதியாக குறைந்து 9 ஆகக் குறையும் சூழல் உருவாகி உள்ளது. வெள்ளிக்கிழமை செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் சிறை நிர்வாகத்தின் அனுமதி கிடைக்காது என்பதால் திங்கட்கிழமையான இன்று சசிகலாவை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.