#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை..!

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர்.

Disproportionate assets case...Minister Ponmudi sentenced to three years in prison

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறியதை அடுத்து தற்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. 

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

Disproportionate assets case...Minister Ponmudi sentenced to three years in prison

இதை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்த தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

Disproportionate assets case...Minister Ponmudi sentenced to three years in prison

அதில், 64.90 சதவீதம் வருமாகத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதை அடுத்து பொன்முடியை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் தண்டனை விவரங்கள் வெளியாக உள்ள நிலையில் நீதிபதி முன் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஜராகினர். அப்போது வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்முடி தற்போது அமைச்சராக இருப்பதால் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios