இந்த நிலைமையிலும் நமக்காக உயிரையும் பணையம் வைத்து இரவு, பகல் பாரமல் காவல் காக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது என சில மக்கள் அராஜாகம் செய்வது தொடர்கிறது.
கொரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே பிணத்தைக் கூட அடக்கம் செய்ய முடியாத அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை கடைபிடித்தால்கொரோனா கட்டுக்கு வந்துவிடும். ஆனால், ஆங்காங்கே மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களிடம் வம்பிழுப்பது, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள இந்த நிலைமையிலும் நமக்காக உயிரையும் பணையம் வைத்து இரவு, பகல் பாரமல் காவல் காக்கும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது என சில மக்கள் அராஜாகம் செய்வது தொடர்கிறது. நேற்று சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்களை பெண் வழக்கறிஞர் மிரட்டிய வீடியோ வெளி வந்த நிலையில், இன்று காலை பிராட்வே ரோட்டில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பெண் உதவி ஆய்வாளரை அநாகரிகமாக பேசியுள்ளார். அந்த வீடியோ இதோ..
"
