ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இயக்குநர் கௌதமனுக்கு சென்னை உயர்நிதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் இன்று புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்தை தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை நடத்தியது. 

இப்போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, சீமான் , கவுதமன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இப்போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி  இயக்குநர் கவுதமனை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோதமாக கூடுதல் , அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கௌதமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் இன்று பிழல் சிடிறயில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை தமிழர் கலை இலக்கிய பண்பாடுப் பேரவை இளைஞர்களும் ரசிகர்களும் திரண்டு வரவேற்றனர்.