Director Bharathi Raja support to vairamuthu

ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு பாஜகவின் எச்.ராஜாவின் பேச்சுக்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டனம் தெரவித்துள்ளார்.

தினமனி நாளிதழ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற வைரமுத்து ஆண்டாள் குறித்து பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா “இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அள்த்த பேட்டியின்போது வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது.

ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

அதில் தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்து, கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

தமிழை உலக உச்சிக்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் வைரமுத்து. அவர் தனி மனிதன் அல்ல. தமிழினத்தின் அடையாளம். நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாய் வாழும் மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.ராஜா போன்றவர்களால் இந்தியா துண்டாடப்பட போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்களை தவறு என்று தட்டிக்கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? எனவும் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.