ஒன்றரை கோடி தொண்டர்கள், இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி, தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக என இவ்வளவு பெரிய பலம் பொருந்திய கட்சிகள் களத்தில் இருந்தாலும், ஒரு இடைதேர்தல், சுயேச்சை வேட்பாளர், அதுவும் புதிய சின்னம் எப்படி இந்த படுதோல்வி? அதிமுக திமுகவை ஆட்டம் காண வைத்தது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைத்துவிட்டால் போதும், அம்மா ஏற்கனவே ஜெயித்த தொகுதி, வேட்பாளராக மண்ணின் மைந்தன் மதுசூதனன், கூடுதலாக ஆளுங்கட்சி பலம், எதிராளியை சமாளிக்க வாக்களர்களுக்கு பணம் என்ற ரீதியின், கொஞ்சம் அலட்சியமாக இருந்தது அதிமுக, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக சிதையதால் களத்தில் பெரிய கைகள் இல்லாததால் இறங்கி வேலை பார்த்தல் நாமதான் ஜெயிப்போம் என ஆதரவாளர்களிடம் சொல்லிவந்தது திமுக. ஆனால் தினகரனோ ஏற்கனவே கொடுத்த  தொப்பியா இருந்தாலும், இல்ல வேற எதுவுமா இருந்தாலும்” என்று சொல்லியிருந்தார். முதல்கட்டமாக திருச்சி கூட்டம் முடிந்த கையோடு ஆர்.கே.நகரில் யாருக்கும் தெரியாமல் தனது களப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் தினகரன்.

ஏற்கனவே, தொப்பி சின்னத்தில் வாக்குகேட்டபோது சுமார் 90 கோடியை கொட்டிய தினகரனின் பெயர் தொப்பியோடு ஒட்டிக்கொண்டது. இப்போது தொப்பியில்லை தினகரன் என்ற பெயர் மட்டும் போதும், வேறு சின்னம் என்ன அதுதான் அனைவரின் பிரஷரையும் எகிற வைத்த பிரஷர் குக்கர். சரி, ஆளும் கட்சியின் வேட்பாளரை சமாளிப்பது எப்படி? ஏற்கனவே அமைச்சர்கள், முதல்வர், எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் அது பொது கூடவே அங்கு இருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் அப்புறம் என்ன வெற்றி தான்.

பிரசாரம் முடிவடைய இருந்த கடைசி இரு தினங்களில், அதிமுக.,வினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரவலாகக் கூறப்பட்டது. குறிப்பாக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக., பெருந்தலைகள் எப்படி பண விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தினகரன் தரப்பு புகார் கூறியதாகவும், ஊடகங்களில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியும் பேசினார்கள்.

சரி, இப்போது ஸ்லீப்பர் செல் மேட்டருக்கு வருவோம்... தினகரன் வார்த்தைக்கு வார்த்தை ஸ்லீப்பர் செல்ஸ், ஸ்லீப்பர் செல்ஸ் என சொல்கிறாரே... யார்தான் அவர்கள்? உளவுத்துறையை நோட்டமிட எடப்பாடி சொல்ல, உளவுத்துறை ரிபோர்டில் கிடைத்தது ஷாக் ரிப்போர்ட்... ஏற்கனவே தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடும்போது தினகரனுக்கு ஆதரவாக வாக்குகேட்ட சில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தான் என்ற தகவல்.

ஆனால், அதிமுக.,வினர் சிலர்  புலம்பியது வேடிக்கையான ஒன்று. அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு போட்டதால் தான் இத்தகைய  வெற்றியை தினகரன் பெற முடிந்தது. அதற்காக, தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் அதிமுக.,வில் வேலை செய்தனராம். அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் ஒதுக்கி, ஒரு லட்சம் ஓட்டுகளும் அதிமுக.,வுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்வதாக ஒரு செய்தி பரப்பப் பட்டது. அப்போது, அதிமுக., விசுவாசிகளிடமே போய் தினகரன் ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பினார்கள். 

அதாவது, அதிமுக., சார்பில்  அந்த வீட்டில் உள்ளவங்களுக்கு ஒருவருக்கு 6ஆயிரம் வீதம், 4 பேருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க.. நீங்க இவ்ளோ தூரம் அதிமுக.,வுக்கு விசுவாசியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க... என்று, அதிமுக., விசுவாசிகளை சரியாகக் கண்டறிந்து புரளி பரப்பினார்களாம். இதனால், தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அதிமுக.,க்கு ஓட்டு போட்டு வந்த பலர் தினகரனுக்கு மாற்றிப் போட்டதாகக் கூறியுள்ளனர். 

இதனை செய்தியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார் தண்டையார்பேட்டை பகுதியினர். அதில், எங்கள் வீட்டில் ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு அதிமுக.,வினர் ரூ.6 ஆயிரம் தரவில்லை. ஜெயலலிதா விசுவாசியான எங்களுக்கு பணம் கொடுக்காத கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்... என்று கூறியுள்ளார். 

எல்லாத்தையும் விட, தேர்தலுக்கு முந்தைய நாள் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போல ஒரு ஆதாரத்தை கடைசி நேரத்தில் வெளியிட்டுதான் தங்கள் குடும்பம் அம்மாவிற்கு விஸ்வாசமான குடும்பம் என வெற்றியை (வீடியோ வெளியிட்ட வெற்றிவேல்) வைத்தே தன்னுடைய மெகா வெற்றியை உறுதி செய்தார் தினகரன்.

இப்படி, எத்தனை எத்தனை தில்லுமுல்லு..? தினகரன் தரப்பு செய்துள்ளது. அதிமுக.,வினர் மட்டுமல்ல  திமுக தரப்பையும்  புலம்பவிட்டது குக்கர் குரூப். விஷயம் இப்படி இருக்க கடந்த இடை தேர்தலில் ஆர்.கே.நகரில் இம்ப்ளிமென்ட் பண்ணி வெற்றி கண்ட தினகரன் அதே, பிளானை  திருவாரூரில் இம்ப்ளிமென்ட் பண்ணுவாரா என யோசிக்க தொடங்கிவிட்டதாம் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும்.

அது ஒருபக்கம் இருக்க, ஆர்.கே.நகரில் வீதிவீதியாக, சந்துபொந்து விடாமல், திமுக, அதிமுக என ஒரு கட்சிக்கு காரர்களின் வீடு விடாமல் பிரசாரம் பண்ண, மன்னிக்கணும் புரளியை கிளப்பிவிட்டு களத்தில் வேலை பார்த்த அதே டீமை திருவாரூரிலும் அனுப்ப இருக்கிறாராம் தினகரன். தகவல் அறிந்த எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.