கடந்த சில மாதங்களாக பெங்களுரு புகழின் செயல்பாடுகள் தனக்கு எதிராக இருப்பதாக குழப்பத்தில் இருக்கும் தினகரனுக்கு. நேற்று புகழேந்தி கொடுத்த பேட்டி அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. கடுப்பில்  லபோ திபோவென கோபத்தில் கத்தினாராம் மிஸ்டர் கூல்.

இந்த தகவல் புகழேந்திக்கும் போயிருக்கிறது. ‘ அவருக்கு எதிரா நானா? அவருக்கு எதிரா செயல்படுவது நானா அவரா என்பது அவரோட மனசாட்சிக்கே தெரியும். முன்பெல்லாம் சாதாரணமாக கூப்பிடுவாரு. பேசுவாரு. இப்போ பேசுறதே இல்லை. பலமுறை அவரை சந்திக்க அப்பாயின் மென்ட் கேட்டேன். நான் கேட்கும் போதெல்லாம், ‘சார் பிசியா இருக்காரு ‘ என்றுதான் சொல்றாங்க. அவரு ஃப்ரீ ஆன பிறகாவது கூப்பிட்டு பேசலாம். நாம கூப்பிட்டாலும் அவரோட பி.ஏ. ஜனா தான் எடுக்கிறாரு. இல்ல தினகரன் சாருக்கு தெரியாம அவரோட உதவியாளர் ஜனா தனி ரூட்ல போய்ட்டு இருக்காரான்னு தெரியலை. ஜனாவ மீறி தினா சார்கிட்ட பேசவும் முடியறது இல்ல.

பருப்பு ஊழல் பல நாளாக கையில் இருக்கு. அவருகிட்ட பேசினால்தானே சொல்ல முடியும். இதுக்கு மேலையும் இந்த ஊழல் பற்றி நான் பேசாமல் இருந்தால் அது பழசாகிடுச்சுன்னு சொல்லிடுவாங்க. அதான் தினா சார்கிட்ட சொல்லாம பேசிட்டேன். தங்கம்  மட்டுமல்ல... யாரு பெங்களூரு வந்தாலும் என்னை கூப்பிடுவாங்க. நான் தான் சின்னம்மாவ பார்க்க ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போவேன். அப்படித்தான் தங்கத்தையும் கூட்டிட்டுப் போனேன். இதுல எனக்கு எந்த தப்பும் இருக்கிற மாதிரி தெரியலை அதா அவரு மனசுல வச்சுகிட்டு பேசுறதுல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. 

இப்போ நான் என்ன பிரச்னையில் இருக்கிறேனோ அதே பிரச்னையில்தான் நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டே போனாரு. இதை உடனே பார்த்து சரி பண்ண வேண்டியது தினா சாருதான், ஜனா மாதிரி ஒரு aala வச்சுக்கிட்டு இப்படி எங்களைமாதிரி விசுவாசிகளா சந்தேகப்பட வேண்டாம் என சொல்லி புலம்பியிருக்கிறார் புகழேந்தி.”