Dinakaran Shock movement at his press meet

உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்களுக்கு என்ன பண்ணீங்க என ஒரு முன்னணி தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்கு ஷாக்கான தினகரன் என்னாது!? என்ன நம்பி ஒட்டு போட்டார்களா? என செய்தியாளரின் இந்த புத்திசாலித்தனமான கேள்வியால் ஒருநிமிடம் திணறிப்போனார் மிஸ்டர் கூல் தினா.

187 இடம், 2000 அதிகாரிகள், 200 வாகனங்கள் என தமிழ்நாடே கொந்தளித்த இந்த மெகா ரெய்டில் கூட கூலாக செம தில்லாக இருப்பவர் யாரென்று கேட்டால் ராஜஸ்தான்காரன் கூட சொல்லுவான் அது தினாதான் என்று, நேற்று முன்தினம் ரெய்டு ஆரம்பித்து சசி கூடாரமே அலறிக்கொண்டிருந்த நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன் பண்ணை வீட்டில் சோதனை செய்தால் சாணியும், உரமும் தான் இருக்கும் என்று தினகரன் நக்கலடித்தார். 

இன்று பேசிய தினகரன் கடந்த 3 நாள்களாக தொடரும் இந்த மெகா சோதனை ஏன் என்று தெரியவில்லை? 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை என்பதெல்லாம் சுத்த பொய்யான தகவல் நாங்கள் ஒன்னும் பெரிய கட்சி இல்லை பிறகு ஏன் என புரியவில்லை. என்ன எதுக்கு கேட்குறீங்க? இன்கம்டேக்ஸ் ஆபிஸர போய் கேளுங்க... நான் காந்தியின் பேரன் இல்லை. சாதாரண மனிதன்தான். அதேசமயம், என் மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன காந்தியின் பேரன்களா?

பிறகு ஆனந்த் ராஜ் ஓபிஎஸ் இபிஎஸ் உண்மையான அதிமுக கிடையாது ஒன்றரை கோடி மக்கள் தான் அதிமுக என குறிப்பிட்டார். இது குறித்து நீங்க என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு, ஆமா அவர் பெரிய தலைவர்... அவர போய் இங்க பேசிட்டுனு. நக்கலாக பதில் சொன்னார். 

அதுமட்டுமில்லாமல், மைலபூர்ல இருக்குற அறிவு ஜீவிதான் தமிழகத்தை ஆட்டி படைக்குதுன்னும். நீங்க பெரிய ஆளுங்க தான்... நாங்க சின்ன ஆளுங்க தானே... எங்கள ஏன் தொந்தரவு பண்றீங்க... அரசியல் வாதினா கோமனத்தோட அலையனுமா..? சொத்தே இருக்க கூடாதா ? என தினகரன் கொஞ்சம் காட்டமாக பேசினார்... மேலும் என் அப்பா எவ்வளவு பணம் வைத்துள்ளார், எவ்வளவு சொத்து வைத்துள்ளார் என்று கேட்டால் எனக்கா தெரியும்? அது அவரை தான் கேட்கணும் என கூலாக நக்கலாக பதிலளித்தார்.