ஒபிஎஸை சந்தித்தது தங்க தமிழ்ச்செல்வன் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும்,  என் கடந்தவாரம் கூட ஓபிஎஸ் என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. நான் கடந்த ஆண்டு  திகார் சிறையிலிருந்து வந்ததற்குப் பின் பன்னீர் செல்வம் என்னை சந்திக்க நேரம்  கேட்டதாக  முக்கிய நிர்வாகிகள் சொன்னார்கள். திரும்பத் திரும்ப கேட்டதால் சந்தித்தேன்.  2017 ஜூலை 12ல் நண்பர் ஒருவர் வீட்டில் அவரை சந்தித்தேன். 

அந்த சந்திப்பின் போது, தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். அப்போது நான் பேசியது தவறு, என்னை மன்னிச்சிடுங்க என கூறினார்.   

அதுமட்டுமல்ல கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க நேரம் கேட்டார் பன்னீர்செல்வம் எனக் கூறினார். மேலும், பேசிய அவர், எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால்,அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார் எனக் கூறினார். அதுமட்டுமல்ல, பழனிசாமியை இறக்கிவிட்டு, எனக்கு பதவி தர விரும்பினார்.  ஆனால் நான், பழனிசாமி. பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்பதால் அவர்களோடு இணைவது வேண்டாம் என நினைத்து தவிர்த்துவிட்டேன். 

இந்த சந்திப்பு எனக்கும் பன்னீர் செல்வத்திற்கும் நெருங்கிய நண்பர் வீட்டில் சந்தித்தோம், இந்த சந்திப்பு எங்கள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும் எனவும் என பகிரங்கமாக தனது பேட்டியில் போட்டுடைத்தார்.