தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டையை விதைத்து, அதுவும் வளர்ந்தபின் அதிலிருந்தும் பழத்தை பறித்து தின்று கொண்டிருக்கும் சீனியர் மோஸ்ட் அரசியல் தலைவர்கள் பலர் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களாலேயே முடியாத அரசியல் மேஜிக்குகளை கூட இப்போது தலையெடுத்திருக்கும் தினகரன் நிகழ்த்திக் கொண்டிருப்பதுதான் ஹைலைட்டே. 

அதிலும் நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல், பதினெட்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நடக்க இருக்கும் நான்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை வைத்து அவர் போட்டிருக்கும் கால்குலேஷனானது அவரது கட்சியினரையே அதிர வைத்திருக்கிறது. 

அதாவது இந்த தேர்தல்கள் அனைத்துக்குமாகவும், அனைத்து தொகுதிகளிலும் தினகரன் பிரசாரம் செய்துள்ளார்தான். ஆனால் எல்லா தொகுதிகளிலும் வார்டுகளை பிரித்து, ஒரு வார்டுக்கு நூற்றைம்பது முதல் இருநூறு வாக்காளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் ஓட்டுக்கு மூவாயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்கள், கொடுக்கவும் இருக்கிறார்கள். இந்த வாக்காளர்கள், உயிரே போனாலும் அ.ம.மு.க.வுக்குதான் வாக்களிப்பார்கள் எனும் முழு நம்பிக்கையை பெற்றபின்னே இந்த பணம் மூவ் ஆகியிருக்கிறது. இந்த டெக்னிக்கே தினகரன் உருவாக்கியதுதான். 

கழக நிர்வாகிகள் தினகரனிடம் ‘தலைவரே வார்டுக்கு சிலருக்கு மட்டும் பணம் கொடுத்தால், மத்தவங்க கோபப்படுறாங்க. அவங்க ஓட்டு நமக்கு விழாம போயிடுமே! பிறகு நாம எப்படி ஜெயிக்க?’ என்று கேட்க, அதற்கு தினகரனோ ”என்னோட டார்கெட் பர்சன்டேஜ்தான். அதாவது இந்த தேர்தலில் இவ்வளவு பர்சன்டேஜ் வாக்குகளை நாம நிச்சயமா வாங்கணும்னு முடிவு பண்ணி வெச்சிருக்கேன். அதை மட்டும் நாம அடைஞ்சா போதும். வெற்றி, பதவியிலெல்லாம் இப்போதைக்கு எனக்கு ஆசை இல்லை. அதுக்கு காலமும் தேவை, உழைப்பு உள்ளிட்ட இன்னும் பல விஷயங்கள் தேவை. அதனால  கிடைக்காத விஷயத்துக்கு ஆசைப்பட்டு, கண்மூடித்தனமா உழைச்சு, ஏமாறுவதை விட இதுதான் புத்திசாலித்தனம். 

இந்த உறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் மூலமாக நமக்கு கிடைக்க இருக்கும் வாக்கு சதவீதமானது, நம்ம கட்சிக்கு பெரிய அங்கீகாரத்தை கொண்டு வந்து தரும். பிற்காலத்தில் கூட்டணிக்கு நம்மை பெரிய கட்சிகள் தேடி வர்றதுல துவங்கி பல அரசியல் மேஜிக்குகளை செய்ய பயன்படும். இவ்வளவு பர்சன்டேஜ் வாக்குகள் நமக்கு இருந்தால், தேர்தல் கமிஷன் சில உரிமைகளை நமக்கு மறுக்காமல் தந்தே ஆகணும். இன்னும் எவ்வளவோ ஆதாயங்கள் இருக்குது. குறிப்பாக, நமக்கு கிடைக்க இருக்கிற அந்த பெரிய பர்சன்டேஜ் வாக்குவங்கியானது அ.தி.மு.க.வுக்கு மைனஸாகி போகப்போவுது, இது அவங்களுக்கு பெரிய சறுக்கலே. 
இப்ப புரியுதா என்னோட பர்சன்டேஜ் அரசியல்?” என்று சிரித்திருக்கிறார். 
அப்படியே ஷாக்காகி விட்டார்கள் நிர்வாகிகள்.