மு.க.ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பருவமழை தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும், தமிழக அரசு செய்து வருகிறது. டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக அரசு ஈடுபட்டுள்ளது.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அது கனவிலும் நடக்காது. 

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவித்தால், அதிமுக அமோக வெற்றி பெறும். தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். தேர்தலின் பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டோம். இவ்வாறு ஆவர் கூறினார்.