ரேஷன் பருப்பில் நடக்கும் ஊழலை இன்று ஆதாரத்துடன் வெளியிட்டார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெங்களூரு புகழேந்தி. நேற்று மதியம் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் பருப்பு ஊழல் பகிரங்கமாக அம்பலமாக்கினார். சில ஆதாரங்களையும் அடுக்கியிருக்கிறார். டிவியில் பார்த்துதான் பார்த்து ஷாக் ஆன தினா  ‘இதை எல்லாம் அவரு முன்பே என்கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல... நானே வெளியிட்டு இருப்பேனே... இப்படி ஒரு கட்சியில் இருந்துகிட்டு என்கிட்ட கூட சொல்லாமல் புகழ்  எப்படி இப்படி பேசலாம்’ என்று கோபத்தில் கத்தினாராம் மிஸ்டர் கூல்.

ஏதோ அவரே தலைவர் மாதிரிதான் எல்லா இடங்களிலும் பேசுறாரு... நடந்துக்குறாரு. புகழின் இந்த செயலை கண்டித்து வார்னிங் கொடுக்கணும், இல்ல நடவடிக்கை எடுக்கணும்... அவரோட நடவடிக்கைகள்  எனக்குப் பிடிக்கல. நானே பெங்களுருக்கு  போனாலும், அவருக்குதான் எல்லோரும் மரியாதை கொடுக்கணும்னு நினைக்குறாரு. போதாததற்கு எனக்கே தெரியாமல் பல முறை ஜெயிலுக்குள் போய் சித்திய பார்த்துட்டு வந்திருக்காரு.

அதுக்கு கூட நான் எதுவும் சொல்லவே இல்லையே...சரி நம்ம ஆளுதானேன்னு அமைதியா இருந்தேன். ஆண்டிபட்டி தங்கம் நம்மால எதிர்க்கிராருன்னு தெரிஞ்சும் அவரைக் கூட்டிட்டு பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்குப் போனாரு. ஆனாலும் அங்கே சித்தி அவரை பார்க்கலை.  சரின்னு நானும் கண்டுக்கல, ஆனால் அவரு இன்னும் திருந்தல, இப்போ கூட எனக்கு தெரியாமல்தானே எல்லாம் செய்யணும்னு நினைக்கிறாரு என தாம் தூம் என ஆதரவாளர்களுக்கிடையே அளப்பரையை கூட்டினாராம் தினா.