Asianet News TamilAsianet News Tamil

சினிமாத்துறையினருடன் உல்லாசமாக இருந்த நடிகையின் தலை எங்கே..? போலீசையே திணறடிக்கும் தில்லாலங்கடி கணவன்..!

துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் தலை கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கை நிரூபிக்க முடியாது என்பதால், திசை திருப்ப பாலகிருஷ்ணன் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

Dilangadi's husband who stuns the police
Author
Tamil Nadu, First Published Feb 8, 2019, 3:02 PM IST

துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நடிகை சந்தியாவின் தலை கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கை நிரூபிக்க முடியாது என்பதால், திசை திருப்ப பாலகிருஷ்ணன் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.Dilangadi's husband who stuns the police

ஜாபர்கான்பேட்டையில் தனது மனைவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் வெட்டி 6 துண்டுகளாக்கி குப்பைத் தொட்டியில் வீசிய வழக்கில் கைதான பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி முன் ‘இந்த கொலையை நான் செய்யவில்லை’ கூறி காவல்துறையினரை அதிர வைத்தார். 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்ட பாலகிருஷ்ணன் வெளியில் வந்து எந்த சலனமும் இல்லாமல், சிரித்தபடி மிக எதார்த்தமாக மீடியாக்களிடம் நீதிபதி முன் சொன்னதையே திரும்ப சொன்னார்.

 Dilangadi's husband who stuns the police

’சந்தியாவை கொலை செய்தது நான் தான்’ என போலீசார் முன் வாக்குமூலம் அளித்த அவர், உடலின் ஒரு பகுதியை வீசிய இடத்திற்கு சென்று அடையாளம் காட்டினார். ஆனால் நீதிமன்றத்தில் தான் அந்தக் கொலையை செய்யவில்லை எனக்கூறி வழக்கை திசை திருப்பப் பார்க்கிறார் பாலகிருஷ்ணன் என்கிறார்கள் விசாரணை நடத்திய காவலர்கள். உடலின் ஒரு பகுதியும், தலையும் கிடைக்காத நிலையில், போலீசாரால் இந்த வழக்கை நிரூபிக்க முடியாது எனக் கூறப்படுகிறது. இதனை முன்பே தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணன் இவ்வாறு பல்டியடிப்பதாக காவல்துறையின் கூறுகின்றனர். Dilangadi's husband who stuns the police

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை 6 துண்டுகளாக்கி 3 பைகளில் கட்டி குப்பை சேகரிப்புத் தொட்டிகளில் வீசிய நிலையில் இது வரை 2 பைகளில் மட்டுமே உடல் உறுப்புகள் சிக்கியுள்ளன. மற்றொரு பையில் வைத்து வீசப்பட்ட தலையும், இடது கையுடன் கூடிய உடலின் ஒரு பகுதியை குப்பைகளுக்கு மத்தியில் தேடி வருகின்றனர். இதற்காக குப்பையை சேகரிக்கும் 20 பேரையும், ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் ஈடுபடுத்தியுள்ளனர். சென்னை முழுவதும் தொட்டிகளில் சேகரித்த குப்பைகள் ஹைட்ராலிக் லாரிகள் மூலம் அழுத்தி கடினமாக்கி இந்த குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அப்படி தலையும், உடல் உறுப்பும் குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டிருந்தால் கண்டுபிடிப்பது கடினம். அழுகிய உடல் உறுப்பின் துர்நாற்றத்தை விட குப்பை துர்நாற்றம் அதிகம் வீசுவதாலும் தலை கிடக்கும் இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 Dilangadi's husband who stuns the police

இதனிடையே இந்த தேடுதலில் தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கை நிரூபிக்க முடியாது என்கின்றனர் ஒரு தரப்பினர். ’’தலை இல்லாமல் போனாலும் கூட கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அறிவியல் பூர்வமாக கண்டறிந்து வழக்கை நிரூபிக்க முடியும்’’ என்கின்றனர் வழக்கறிஞர்கள். அதே வேளை கொலையானவர் பாலகிருஷ்ணனின் மனைவி தான் என மரபணு சோதனைகள் மூலம் நிரூபித்தாலும், கொலை செய்தவர் பாலகிருஷ்ணன் தான் என்பதை உறுதிபடுத்துவதற்கு இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் இன்னும் ஆதாரங்களை திரட்டி நிரூப்பிக்க வேண்டியது அவசியம். Dilangadi's husband who stuns the police

குற்றம் அரங்கேற்றப்படும் விதம், குற்றங்களின் தன்மை இதனால் ஏற்பாடும் அழுத்தம் காரணமாக விரைந்து செயல்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துவிடுகின்றனர். ஆனால் அதன் பிறகு வழக்காடுவதில் ஏற்படும் தொய்வால் பல வழக்குகள் நிரூபிக்க முடியாத நிலை இருப்பதாக நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது. இந்த வழக்கில் கொலையான பெண்ணின் கையில் இருந்த டாட்டூகளை வைத்தே துப்பு துலங்கிய போலீசார் தலை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கை நிரூபிக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதனை மனதில் வைத்தே பாலகிருஷ்ணன் போலீசாருக்கு தண்ணீர் காட்டி வருவதாக கூறுகிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios