DIG rupa talks about special facilities for sasikala in prison

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றீகளா என கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள பரப்பன அக்ரஹார சிறை டிஐஜி ரூபா அறிக்கை அனுப்பியுள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக ரூபா கடந்த 23 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து, பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த மாதம் 10 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற ரூபா அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அவருக்கு சமையல் செய்து கொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதையும் ரூபா கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள், ஊழியர்கள், கைதிகள் உள்ளிட்டோரிடம் ரூபா விசாணை நடத்தி அதை பதிவு செய்துள்ளார். அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ரூபாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுக்க தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறதே இது உண்மையா? அப்படி இல்லை என்றால் அது குறித்து பதில் அளிக்க வேண்டும் அப்போது தான் நான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபரம் தற்போது பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது.