சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை மகன் இறந்தபோன போது அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லுவதற்காக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் சென்னையில் இருந்து சாத்தான்குளம் சென்றார். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தால் இபாஸ் எடுத்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று தமிழக அரசு உத்தவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உதயநிதி இபாஸ் எடுத்தாரா என்கிற விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இவரைத் தொடர்ந்து ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்ற விவகாரம் போய் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் போடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானது.

 சாத்தான் குளம் சென்ற போது உதயநிதிஸ்டாலின் இ பாஸ் எடுத்தாரா? என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது.. " ஜெயலலிதா தங்கியிருந்த போயஸ்கார்டன் "வேதா இல்லம்" நினைவில்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணம்.அதைத்தான் அதிமுக அரசு செய்திருக்கிறது.ஆகவே நினைவில்லமாக்கப்படும், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வேதாஇல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற மக்களின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.அதிமுக தொண்டர்கள் கோயிலாக நினைக்கும் இடம் அந்த இல்லம். அதனை நினைவு இல்லமாக்க ஒத்துழைக்க வேண்டும். 


 ரஜினியின் இ பாஸ் விவாகரம் குறித்து பேசிய அமைச்சர்.."சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எந்த பாரபட்சம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. விதி முறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்தாரா? என்பதற்கு இப்போது வரை ஆதாரம் இல்லை என்றார்.