நான் பெண்களை தவறாக பேசவில்லை; தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா பற்றிய சர்ச்சைப்பேச்சு  உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கல்லக்குடியில் சமீபத்தில் பேசுகையில், ’எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு’என்று கூறினார். உதயநிதியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி.தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக பெண்களுக்கு மரியாதை மற்றும் உரிமையை கொடுக்கும் கட்சி என கூறி வரும் கனிமொழி கூட உதயநிதியை கண்டிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நான் பெண்களை தவறாக பேசவில்லை; நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; யார் மூலமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.