ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டேனா.? ஆடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சூர்யா சிவா!

ரவுடி வரிச்சியூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று திருச்சியில் முன்னாள் பாஜக நிர்வாகி சூர்யா சிவா கூறியுள்ளார்.

Did I apologize to rowdy varichiyur selvam bjp suriya siva release audio

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற ரவுடி மீது வழக்கு பதிவு என செய்தி வெளியானது.  இது சம்பந்தமாக வரிச்சியூர் செல்வம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த  பேட்டியில்.  என்னை ரவுடி என்று கூற வேண்டாம்  கோமாளி என்று கூறினால் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருந்தார்.

Did I apologize to rowdy varichiyur selvam bjp suriya siva release audio

இதையும் படிங்க..Kamal : இதுதான் என்னுடைய எதிரி.. அரசியலில் சில சமரசங்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கு- போட்டு உடைத்த கமல்ஹாசன்!

மேலும் திருச்சி பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா அவரது ட்விட்டர் பக்கத்தில் என்னை ரவுடி என பதிவு செய்திருந்தார். அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று பேட்டியளித்தார். இது தொடர்பாக இன்று திருச்சியில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சூர்யா சிவா.

இதுகுறித்து பேசிய அவர்,  எனது டிவிட்டர் பக்கத்தில் வரிச்சியூர் செல்வமும், காயத்ரி ரகுராமும் இரவு நேரத்தில் ஒரு தோப்பில்   சந்தித்ததாகவும் நான் போட்டிருந்தேன்.  இது தொடர்பாக எந்த செய்தியில் அவரிடம் கேட்கவில்லை அவராகவே சூர்யா சிவா என்னிடம் பேசி மன்னிப்பு கேட்டார் பின்னாடி எடுத்து விட்டார் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் மன்னிப்பு கேட்டார் என்ன செய்திகள்  வருகிறது. அந்த பேட்டியை பார்க்கவில்லை. இரண்டு நாட்கள் பிறகு அவர் எனக்கு ஒரு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரியாமல் கூறிவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் எனக்கூறி அதற்கான ஆடியோவையும் வெளியிட்டார். பாஜகவில் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததிலிருந்து தொடர்ந்து திமுக எதிர்ப்புகளை பதிவு செய்து தான் வருகிறேன். நான் திமுகவில் இணையும் அவசியம் இல்லை. நான் இன்று வரை பாஜக பிரமுராக தொடர்கிறேன்.

எனது ராஜினாமாவை பாஜக தலைமை இன்னும் எற்றுக்கொள்ள வில்லை. 2026ம் வரை அண்ணாமலை பாஜக தலைவராக இருப்பார். அப்போது தனிப்பெருபான்மையுடன் பாஜக  தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும். அப்போது அண்ணாமலை தான் முதல்வர் என்று கூறினார்.

இதையும் படிங்க..Palani : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios