Asianet News TamilAsianet News Tamil

பேரறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டாரா..? அண்ணாமலை கூறியது உண்மையா.? மதுரையில் நடைபெற்றது என்ன.? வெளியான தகவல்

அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை கூறியது உண்மையா .? என்ற கேள்வி எழுந்துள்ளது.

did arignar anna apologize Is what Annamala said true KAK
Author
First Published Sep 19, 2023, 12:59 PM IST

அதிமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த பாஜகவுடன் அதிமுக உறவை முறித்துள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் பேச்சு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி சென்னையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

அப்போது மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மணிமேகலை என்ற குழந்தை தமிழ் சங்க இலக்கியம் பாடியதாகவும், இதனை தொடர்ந்து பேசிய அண்ணாதுரை இந்த பொண்ணு நல்லா பாடியது. இதுவே கற்காலமாக இருந்தால் உமையாளின் பாலை குடித்ததால் தான் இந்த பெண் அழகாக பாடியது என குறிப்பிட்டிருப்பார்கள் என தெரிவித்தார். நல்ல வேளை மக்களிடம் பகுத்தறிவு வந்து விட்டது என அண்ணாதுரை கூறியுள்ளார்.

did arignar anna apologize Is what Annamala said true KAK

மதுரையில் நடைபெற்றது என்ன.?

இதனை தொடர்ந்து அடுத்த நாள் நடைபெற்ற கூட்டத்தில் மேடையில் பேசிய முத்துராமலிங்க தேவர், சிவ புராணம் இயற்றப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உமையாளை  தப்பாக பேசியது யார் என ஆவேசமாக பேசியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்,  கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பற்றி பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில்  அபிசேகம் செய்யப்படும் என்று முத்துராமலிங்க தேவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மன்னிப்பு கேட்டு மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து பி.டி.ராஜனும், அண்ணாதுரையும் பயந்து ஓடி வந்தார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்ன? என கேள்வி எழுந்துள்ளது.  

did arignar anna apologize Is what Annamala said true KAK

அண்ணா மன்னிப்பு கேட்டாரா.?

நடந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கையாளர் ஷியாம் அப்போது நாளிதழ்களில வந்த செய்தியை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில்  1956 ஆம் ஆண்டு மதுரை தமிழ் தமிழ் சங்க நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அப்போது பகுத்தறிவு கருத்தை அண்ணாதுரை பேசியுள்ளார். இதனையடுத்த 6ஆம் நாள் பேச வேண்டிய  முத்துராமலிங்க தேவர், 5 ஆம் நாள் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது ஆலயத்தில் தெய்வத்திற்கு எதிராக பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பகுத்தறிவு கருத்தை பேசுவதாக இருந்தால்  தமுக்கம் மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்துங்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து தமுக்கம் மைதானத்திற்கு அடுத்த நாள்  கூட்டம் நடைபெற்றுள்ளது. அறிஞர் அண்ணாவிற்கும் முத்துராமலிங்க தேவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை, மீனாட்சி அம்மன் கோயிலில் தேவர் பாலுக்கு பதிலாக ரத்த அபிஷேகம் செய்யப்படும் என கூறியதில் உண்மை இல்லை. அறிஞர் அண்ணா மன்னிப்பு எதுவும் கேட்கவில்லையென கூறப்படுகிறது. 

did arignar anna apologize Is what Annamala said true KAK

மன்னிப்பு கேட்கவும் இல்லை..எதிர்பார்க்கவும் இல்லை

இதே போல மதுரையில் நடைபெற்ற தமிழ் தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்துராமலிங்க தேவரின் உறவினர் ஒருவர் தற்போது முதுகளத்தூரில் வசித்து வருகிறார். அவரும் இந்த தகவலை மறுத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அண்ணாமலை கூறியது  தொடர்பாக முதுகளத்தூரை சேர்ந்த அந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அப்போது அவர் அண்ணா மன்னிப்பும் கேட்கவில்லை; முத்துராமலிங்கத் தேவர் மன்னிப்புக்கேட்க சொல்லி கூறவும் இல்லை என்று சொன்னார். இவர்கள் இருவரும் பெரிய தலைவர்கள்,  அவர் மன்னிப்பையும் எதிர்பார்க்கவில்லை, அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்கசொல்லி எதிர்பார்க்கவும் இல்லை என கூறியந்தாக டிடிவி தினகரன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

என்னதான் அண்ணாமலை பேசினார்? அதிமுகவுடன் கூட்டணிக்கு உடைந்ததுக்கு இதுதான் காரணமா.? வெளியான தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios