அஜித் தலையில் யாரோ ஒருவர் அடிப்பது போலவும், ஷ்யாலினி வரிசையில் நின்று வாக்களிக்காமல் நேரடியாக சென்று ஓட்டுப்போட்டதற்கு இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 

தன் மனைவி ஷாலினியுடன் காரில் வந்து வாக்களித்தார் நடிகர் அஜித். அவருக்கு பாதுகாப்பு கொடுத்தது சரி, அவரின் காரின் கதவை ஏன் திறந்துவிட்டீர்கள் என போலீஸாரை கிண்டலடித்து வந்தனர். அஜித் வந்த போது வாக்குசாவடி அருகே ரசிகர்களின் கூட்டத்தால் ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Scroll to load tweet…


நடிகர் விஜய் வரிசிஐயில் நின்று பொறுமையாக வாக்களித்ததும் அவரிடம் செல்ஃபி எடுக்க வந்தவர்களிடம் பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததும் வைரலாக பரவியது. அதே சமயம் காலை 7 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்தை பார்க்க பெரும் கூட்டம் திரண்டது. கூட்ட நெரிசலுக்கு மத்தியில் சிரமப்பட்டு வாக்குச்சாவடிக்குள் சென்று அவர் வாக்களித்து தனது மனைவியுடன் திரும்பினார். 

Scroll to load tweet…

வாக்களித்து இரண்டு தினங்களுக்கு பிறகு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் அஜித் தலையில் யாரோ ஒருவர் அடிப்பது போலவும், ஷ்யாலினி வரிசையில் நின்று வாக்களிக்காமல் நேரடியாக சென்று ஓட்டுப்போட்டதற்கு இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதனை ஓட்டு பூத்தில் செம கட்டு என ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

Scroll to load tweet…

ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாது வாக்களிக்க அஜித் தவறுவதில்லை. அப்படி சில முறை பொதுமக்களுடன் வரிசையில் நின்று அஜித் வாக்களித்ததும் வைரலான விஷயம். இந்நிலையில் அவர் வாக்களிக்க சென்ற போது பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை உணர்ந்த அஜித், வக்களித்துவிட்டு வெளியே சென்ற போது அஜித் மன்னிப்பு கேட்டபடி வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இது தான் தல என பெருமை கொள்கின்றனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…