நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்து திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விரையில் திமுகவில் இணைய இருப்பதாக தவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில்,  ஊட்டச்சத்து நிபுணரான தனது மகள் திவ்யாவுக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திவ்யா கூறுகையில், ‘’என் அப்பா சத்யராஜ் என் உயிர் தோழன், என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால், என் சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

பிரபல நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக செயல்படுகிறார். கொரோனா நேரத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும், பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதியது சமூகவலைதளங்களில் வைரலானது. தற்போது ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று முன்னர் வைத்த கோரிக்கைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறி இருந்தார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தனது மகளை திமுக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சத்யராஜ் தனது மகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரம் கூறுகிறது.