முதல்வரின் பொறுப்புகளை கவனிக்க கேர் டேக்கர் தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கெத்தாக சொன்னதற்கு, துரைமுருகன் அசால்ட்டாக கலாய்த்து தள்ளியுள்ளார் .

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளார், வரும் செப்டம்பர் 10ஆம் தேதிதான் தமிழகம் திரும்புகிறார்.  

முதல்வரின் சுற்றுப் பயணத்தின்போது அவருடைய பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்ததுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு தொழில்நுட்பம் பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. எனவே முதல்வருடைய பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஊடகங்கள்தான் கேர் டேக்கர், கேர் டேக்கர் என்று சொல்லிவருகிறது. தமிழக மக்களை கேர் டேக் செய்யும் அளவுதான் முதல்வர் உள்ளார். தமிழக அரசும் உள்ளது. முழுமையான அளவு முதலீடுகளை பெறும் வகையில் முதல்வரின் பயணம் அமையும் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு கலாய்க்கும் விதமாக பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமானால் கேர் டேக்கர் தேவைப்படலாம். தமிழக அரசு ஒன்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதில்லை.பிறகு எதற்கு கேர் டேக்கர் எல்லாம்? மரண கலாய் கலாய்த்துள்ளார்.

துரைமுருகனின் இந்த கலாய்க்கு இதுவரை அதிமுகவிலிருந்து சரி, கலாய் வாங்கிய ஜெயக்குமாரிடமிருந்து இன்னும் பதிலே வராததால், துரைமுருகன் ஆர்மியினரும் தங்கள் பங்கிற்கு கலாய்த்து வருகின்றனர்.