திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஊர்வலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கி, வாலாஜா சாலை வழியாக கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னர், கருணாநிதிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, தாய்க்கழகமான திராவிடர் கழகம், திமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.அப்போது அழகிர்யைபற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த கி.வீரமணி, வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்  கோபமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த முக அழகிரியின் மகன் துரை தயாநிதி டிவீட் செய்துள்ளார். அதில்,  காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும்  ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன் என திராவிடக் கழகத் தலைவர் வீரமணியை மானபங்கப் படுத்தியுள்ளார். துரை தயாநிதியின் இந்த பதிலால் ஒரு பெரிய மனுஷனை ஓசி சோறு என திட்டுவதா? வயசுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டாமா? என துரை தயாநிதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். திமுகவில் நுழைய முயலும் மு. க அழகிரியால் இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும் என கலாய்த்துள்ளார்.

இதனையடுத்து, விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் தனது டிவிட்டர் பதிவில், 'அழகிரி இட்லி கடை வைக்கலாம்' என நக்கல் அடித்துள்ளார்  சுப்பிரமணியன் சுவாமி. கி.வீரமணிக்கு எதிராக பொங்கோ பொங்குனு பொங்கிய அழகிரி இதற்கு என்ன சொல்கிறார்? ஆசிரியர் என்றால் பாய்வதும் ஆரியர் என்றால் பம்முவதும் ஏன்? என  அழகிரியின் மகன் துரை தயாநிதியை டேக் செய்து கேள்விஎழுப்பினார்.

ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலளித்த துரை தயாநிதி, மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை , அதுவே காரணம்  என ஒரே வரியில் பதிலடி கொடுக்கததற்க்கு பதில் அளித்துள்ளார்.