இவ்ளோ நாள் தெரியலயா யாருக்கும்  விஜயகாந்த்துக்கு ஹெல்த் சரி இல்லைன்னு.. நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று திமுகவினரை கோபத்தில் ஆழ்த்தும் வகையில் ட்வீட் ஒன்றினை முக அழகிரி மகன் துரை தயாநிதி பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதில் இருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ளது. அதிமுக-பிஜேபியுடன் கூட்டணி இழுபறி என்றதும் அரசியல் காலத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து மாறி மாறி அரசியல் தலைவர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். முதலில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த அடுத்த நாளே முக ஸ்டாலினும் விஜயகாந்த்தை வீட்டிற்கு சென்று சந்தித்தார்.  

விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல்நலம் குறித்து பேச மட்டுமே வந்தாகவும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் விஜயகாந்த்துடனான சந்தித்துப்புக்கு பின் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

"ivalo naal theriyalaya yaarukum Captain Vijayakanth ku health seri ilanu ? 🤔 neengha thirundhavey maateenga"

இந்நிலையில், மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "இவ்ளோ நாள் தெரியலயா யாருக்கும் கேப்டன் விஜயகாந்த்துக்கு ஹெல்த் சரி இல்லைன்னு.. நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று பதிவிட்டுள்ளார். நீங்க திருந்தவே இல்லைன்னு"  தனது தனது சித்தப்பா ஸ்டாலினை சொல்லியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் கோபத்தை வரவழைத்துள்ளது.

கடந்த ஆண்டு திக தலைவர் வீரமணியையும், காலம் காலமாக தி.மு.கவிலும், அ.தி.மு.கவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்" என்று கலாய்த்து டுவீட் போட்டு உலக அளவில் வைரலாக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.