என்ன பிரச்சனை இருக்குதுன்னு பெட்டிசன் எழுதி கொடுங்க, சும்மா தாத்தாகிட்ட கொடுத்தேன் பாட்டிக்கிட்ட குடுத்தேன்னு ரீல் விடாதிங்க  என செய்தியாளர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசமாக கத்தியதால் அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பயிற்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் டான் டீ அதிகாரிகள் ஆய்வு கூட்டம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.புலிகள் காப்பகம் குறித்த விவாத கூட்டத்தை கட்சி கூட்டம் போல மாற்றி ஆளும்கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தில் அமரச்செய்தார் அமைச்சர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கும்போதே அருகில் இருந்த அதிகாரிகளிடம் இது என்ன கூட்டம் எனக் கேட்டு சுதாரித்துக்கொண்டு பின்னர் பேசத் துவங்கினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிதிநிலை தொடங்கும் முன்னர் ஒவ்வொரு துறையிலும் ஆய்வு நடத்தப்படும். அந்த கூட்டம்தான் இது என்றார்.

 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக நீலகிரி உள்ளது,ஆனால் பல மாதங்களாக வன கால்நடை மருத்துவர்கள் இங்கு இல்லை என்ற கேள்விக்கு, அதற்குக் கால்நடை மருத்துவர்கள் இல்லையா சரி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பதில் அளித்தார். 

பின்னர், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது என்ற கேள்விக்கு, இது குறித்து புகார்கள் இதுவரை எனக்கு வரவில்லை என்றார். அடுத்ததாக முதுமலையில் பழங்குடி மக்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது என கேட்ட கேள்விக்கு காண்டான திண்டுக்கல் சீனிவாசன் “நான் வனத்துறை அமைச்சர் நான் சொல்லுறத கேளுங்க. என்ன பிரச்சனை இருக்குதுன்னு பெட்டிசன் எழுதி கொடுங்க, சும்மா தாத்தாகிட்ட கொடுத்தேன் பாட்டிக்கிட்ட குடுத்தேன்னு ரீல் விடாதிங்க” எனச் செய்தியாளர்களை பெட்டிசன் எழுதித் தரச்சொல்லி செம்ம  டென்ஷன் ஆகியுள்ளார்.

இத்தனை வருஷமா  வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அமைச்சருக்கு வனத்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியலையா?  இதை கேட்டா பெட்டிஷன் எழுதிக் கொடுக்கணுமா? கேட்ட கேள்வி என்னன்னே தெரியாமல் இப்படியா ஒரு அமைச்சர் இருப்பார்? என திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் கதிகலங்கிப்போயுள்ளனர்.