தங்கமணி உடனான அந்த ரகசிய டீலுக்குப்பின்  லீலா பேலஸில் தினகரனை சந்தித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது, சில  அடுக்கடுக்கான கேள்விகளையே முன்வைத்தாராம். ‘செந்தில்பாலாஜி திமுக பக்கம் போகப் போறாருன்னு 3 மாசத்துக்கு முன்பே உங்ககிட்ட சொன்னேன். அப்பவே செந்தில்பாலாஜியோட பேசி இருந்தால் இப்போ அவரு போயிருக்கவே மாட்டாரு...’  அப்போ நீங்க, சின்னம்மாவை பார்க்கப் போனீங்க. ‘யாரு வேணும்னாலும் போகட்டும்’னு சின்னம்மாவே சொன்னதாக சொன்னீங்க. ஆனா சின்னம்மா அப்படி சொன்னாங்களான்னு எங்க எல்லோருக்கும் சந்தேகம் இருக்கு என நேரடியாக அடித்தாராம்.

ஆண்டிப்பட்டி தங்கத்திடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்க்காத தினகரனோ, அப்படின்னா நான் பொய் செல்றேனா என்ன? என குமுறினாராம். ஆனால் தங்கமோ ‘பல எம்.எல்.ஏ.க்கள் அப்படித்தான் நினைக்கிறாங்க...’ என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். தங்கத்தை சமாதானப்படுத்தி, அனுப்பிய பிறகு தான் அமைச்சர் தங்கமணி யோடு ரகசிய டீல் பேசியது தினகரனுக்கு தெரிய வந்தது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி போன துக்கத்திலிருந்து மீளாத தினகரனுக்கு, தங்கத்துக்கு விலை பேசிய விவகாரம்  இடியாக இறங்கியது. பதறிப்போன தினகரன்  தங்கத்துக்கு போன் போட்டு  ‘சின்னம்மாவை பார்க்க நான் பெங்களூரு போறேன். நீங்களும் வாங்க. மற்ற எம்எல்ஏக்கள் யாரு வராங்களோ எல்லோரையும் கூட்டிட்டுப் போவோம்...’ அக்ராஹாராவிற்கு அழைத்து சென்றிருக்கிறார் தினகரன்.

நேற்று அக்ரஹாரா சிறைவில், செந்தில் பாலாஜி பற்றி பேசாமல் நலம் விசாரித்துவிட்டு அனுப்பியிருக்கிறார். தினகரன் மட்டும் 20 நிமிடங்கள் சசிகலாவுடன் தனியாக பேசினாராம், இப்போது தனக்கு பெரும் நிதி நெருக்கடி உள்ளது. கட்சி நடத்தவே கஷ்ட்டமா இருக்கு, அதைச் சரிகட்டத்தான் தன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு சிறைக்குச்  வந்ததாக சொல்லியிருக்கிறார். 

சசிகலாவும்  காசு கொடுக்க ஓகே சொன்னாராம், ஆனால், மொத்த பணமும் இளவரசி குடும்பத்தின் கையில்தான் இருக்கிறதாம். ஏற்கனவே, விவேக், கிருஷ்ணப்ரியா என ஒவ்வொருவரையும் சமாளிக்கணும்  என மண்டையை பிய்த்துக் கொள்கிறாராம். இதனையடுத்து வெளியில் வந்த தினகரன், பெங்களூரு ஸ்டார் ஹோட்டலில் வைத்து தங்கத்தை பட்டை தீட்டி வருகிறாராம்.