திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து துக்கத்தில் திருக்கும் திமுகவும், யாரோடு கூட்டணி? என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருக்கும் அதிமுகவும் சைலன்ட்டாக இருக்கும் இந்த நேரத்தில், தினகரனோ ஜெட் வேகத்தில் தேர்தல் களத்தில்  குதிக்க திட்டம் வகுத்து வருகிறார்.

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உட்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளை 6 மண்டலங்களாக பிரித்து மண்டலப் பொறுப்பாளர்கள் அமமுக மண்டல பொறுப்பாளர்களை கட்சியின் துணைபொதுசெயலாளர்  தினகரன் நியமித்துள்ளார்.  

மக்களவை தேர்தலில் ஜெயலலிதா 37 தொகுதிகளில் வென்றதை போல் ஜெயித்துக் காட்டுவோம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்  என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் எங்கள் லட்சியம் 40 தொகுதிகள். 37 தொகுதிகள் நிச்சயம் என்ற தாரக மந்திரத்தை வைத்து களத்தில் குதித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் சாதனை வெற்றியை படைத்து மத்திய அரசை தீர்மானிக்கும் சக்தியாக விளங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த கூட்டம் அம்முக தலைமை கழகத்தில் நடக்கும் என கூறியுள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு  பின் மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை ஆலோசனை கேட்கிறாராம்.

தலைவர் மறைந்த  துக்கத்தில் திமுகவும், யாரோடு கூட்டணி வைப்பது? எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது? என  டீப் டிஸ்கஷனில் அதிமுக இருக்கும் சூழலில், அசால்ட்டாக  தேர்தல் பொறுப்பாளர்கள், 40 தொகுதிகளை கைப்பற்ற அடுத்த கட்ட வேலைகள் என தீயாக வேலை பார்த்து வருகிறார் தினகரன்.