Asianet News TamilAsianet News Tamil

தருமபுரிக்கு 3 எம்.பி.ககள் ! ஆச்சரியம் ஆனால் உண்மை !!

தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ள நிலையில்  பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணியும், அதிமுக சார்பில் மேட்டுர் சந்திரசேகரும் எம்.பி.யாக உள்ளனர். இப்படி ஒரே தொகுதியில்  3 பேர் எம்.பி.க்களாக இருப்பதால் அத்தொகுதியின் அடிப்படை தேவைகளை இணைந்து நிறைவேற்றுவோம் என திமுக எம்.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
 

dharmapuri 3 MP s
Author
Dharmapuri, First Published Jul 8, 2019, 10:37 AM IST

கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுர தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமாரும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணியும் போட்டியிட்டனர். ஆனால் இத்தேர்தலில் அன்புமணி திமுக வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்தார். செந்தில் குமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவைத் உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற் உள்ளது. இதில் 3 தொகுதிகிள் திமுகவுக்கும், 3 தொகுதிகள் அதிமுகவுக்கும் கிடைக்க  உள்ளன.

dharmapuri 3 MP s

திமுக – மதிமுக இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி  மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார். திமுகவில் சண்முகம் மற்றும் வில்சம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் ஒரு சீட் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தருமபுரி தொகுதியைச் சேர்ந்த அன்புமணி எம்.பி.ஆகிறார். இதே போல் அதிமுக சார்பில் மேட்டுர் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவரும் தருமபுரி தொகுதியைச் சேர்ந்தவர்தான். ஆக தருமபுரி தொகுதிக்கு மன்று எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

dharmapuri 3 MP s

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. டாக்டர் செந்தில் குமார், தருமபுரி தொகுதிக்கு மூன்று எம்,பிக்கள் உள்ளனர். நாங்கள் மூவரும் இணைந்து தருமபுரி தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

dharmapuri 3 MP s

இந்த தொகுதியின் குடிநீர் பிரச்சனை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மற்ற இரு எம்.பி.க்களையும் சந்தித்ப் பேச உள்ளதாகவும் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். எதிரெதிர் கட்சி எம்.பி.க்கள் மக்கள் பிரச்சனைக்காக இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது ஆச்சர்யம் அளித்துள்ளது. மேலும் இத்தகைய நல்லெண்ணம் அனைத்து அரசியல்வாதிகளிடமும் இருக்க வேண்டும் என மக்களும் விரும்புகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios