போடப்பட்டுள்ள நிலையில் இது பற்றி விசாரணை நடத்த கவர்னர் உத்தரவின் பேரில் டிஜிபி டி.கெ.ராஜேந்திரனே நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதாக நேற்று ஓபிஎஸ் நேரில் கவர்னரிடம் புகார் அளித்திருந்தார். அதே போன்று ஆட்கொணர்வு மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏவும் நேரில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , டிஜிபி , கமிஷனர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அறிவுறுத்தினார். எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து டிஜிபி ராமானுஜத்தை நேரில் சென்று ஆய்வு நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து டிஜிபி ராஜேந்திரன் இன்று ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது. ஆனால் டிஜிபி நேரில் செல்ல மாட்டார் என்றும் மாவட்ட எஸ். பி நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.