5மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பநீண்ட இடைவேளைக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு பிரசாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இன்று தான் துவங்கியது என்பதால் வெளியூர் பக்தர்கள் இன்று வர முடியவில்லை. இருப்பினும் உள்ளூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.  பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயிலில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வெப்பநிலை கணக்கிடுதல், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே அறிவுறுத்திய படி பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவிலில் அர்ச்சனை பூஜைகள் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடித்த பின்பாக கோவிலில் அமர்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.