காங்கிரஸ் கட்சிக்கு திமுகவிடம் 234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கு ஆசை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரஜினி ஏப்ரல் 1ம் தேதிதான் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார். ஏனென்றால் அன்றுதான் முட்டாள்கள் தினம். நடிகர்கள் எல்லோராலும் எம்ஜிஆர், சிவாஜி ஆகிவிட முடியாது. சிவாஜியே மக்களைக் கணக்குப் போடதெரியாமல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். இத்தனைக்கும் எம்ஜிஆருக்கு நிகரான செல்வாக்கு அவருக்கும் இருந்தது.
இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று கூறுவது தவறு. உண்மையில் மோடியுடைய தாடிதான் வளர்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக பல கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், எத்தனை கோடி செலவு செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தற்போது சிலிண்டர் விலை ரூ. 100 உயர்ந்துள்ளது. எரிபொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுகவிடம் 234 தொகுதிகளும் கேட்க வேண்டும் என்றுதான் எங்களுக்கு ஆசை. அது சாத்தியமில்லை. திமுகவுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வேண்டிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெறும்” என்று இளங்கோவன் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 17, 2020, 9:57 PM IST