ஜெயலலிதாவின் நினைவு  நாளும் அதுவுமா இணைய பேர்வழிகளின் வாயில் செம்ம அவலாக வந்து சிக்கியிருக்கிறார் தம்பி துரை!..’அத்தனை பேரும் கறுப்பு, ஆனா தம்பி மட்டும் வெள்ளை’ என்று வெளுத்தெடுக்கின்றனர்.

ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. இன்று மெரீனாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. வி.வி.ஐ.பி.க்கள் அத்தனை பேரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் ஒரே நேரத்தில். முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர், முணுசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன், வேலுமணி, வளர்மதி, மாஜி கோகுல இந்திரா, மனோஜ்பாண்டியன், தமிழ் மகன் உசேன், மகாலிங்கம், செல்லூர் ராஜு, மைத்ரேயன், காமராஜ், ஜெயக்குமார், வைகை செல்வன், டாக்டர் மணிகண்டன், தமிழ்மணி, மாஜி சின்னையா, மாஜி முக்கூர் சுப்பிரமணியம் என அம்புட்டு பேரும் கறுப்பு நிற ஆடையில், கவலை தோய்ந்த முகத்துடன் ஆஜராகி இருந்தனர். 

ஆனால் கூட்டத்தில் ஒருவர் மட்டும் வெள்ளையாக, தம்பிதுரை மட்டும் வழக்கமான வெள்ளை சட்டை, வேஷ்டியில் முன் வரிசையில் இருந்தார். அஞ்சலி குறித்த செய்தியுடன் போட்டோதான் சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் வலம் வருகிறது. அதில் தம்பிதுரை மட்டும் தனித்து தெரிவது அ.தி.மு.க. முக்கியஸ்தர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது. 

‘எல்லாமே அம்மாவால்தான்! இந்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் வாழ்க்கை கூட அம்மா போட்ட பிச்சை! என வாய்க்கு வாய் பேசும் தம்பிதுரை ஒரு கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு நினைவிடத்துக்கு வர கூடாதா? 

அட ஏதோ அவசரம் சட்டை தயாராகவில்லை ஓ.கே! வரும் வழியில் ஒரு கடையில் வாங்கி மாட்டியிருக்க கூடாதா? ராஜ்யசபா துணை சபாநாயகர் அழைத்தால் வேன் ஷூஸைன் கம்பெனியின் ஓனரே கறுப்புச் சட்டையை தூக்கிக் கொண்டு கால் தெறிக்க ஓடி வருவானே? அப்படியிருக்கையில் இதென்ன கெத்து!
தான் தனித்து தெரியவேண்டும் என தம்பிதுரை அப்படி செய்தாரா? இல்லை ஏதோ ஒரு மனக்குமுறலை இப்படி சிம்பாலிக்காக பதிவு செய்தாரா!” என்று இணையத்தில் போட்டு தாளிக்கின்றனர் தம்பிதுரையை.