இப்போதுதான் குரு பெயர்ச்சி நடந்துள்ளது. இனிதான் தெரியும் யாருக்கு கெட்ட நேரம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் கூறியுள்ளார். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் துணை முதல்வரின் மகன் ரவீந்தரநாத் 
கலந்துகொண்டார்.

 

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு 10.05 மணிக்கு குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர், ரவிந்திரநாத், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது.

 

இனி யாருக்கு நல்ல நேரம்; யாருக்கு கெட்ட நேரம் என்பது தெரியவரும் என்று அங்கிருந்து புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் - பா.ஜ.க.வோடு சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதலமைச்சர் ஆகலாம் என்று கனவு கண்டு கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார். இப்போது கூட எனக்கு ஆட்களை அனுப்பி எங்களோடு சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிடலாம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்தது நான்தான் என்று டிடிவி தினகரன் அண்மையில் கூறியிருந்தார்.