தமிழக துணைமுதல்வராகவும் நிதியமைச்சராகவும் இருந்து வருபவர் ஓ.பன்னீர் செல்வம். கடந்த சில வாரங்களாக இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இருந்த ஓ.பி.எஸ் கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 10 வது பட்ஜெட் ஆகும். அதன்பிறகு நடைபெற்ற பட்ஜெட் உரையிலும் பங்கேற்று பதிலளித்தார். இந்தநிலையில் பட்ஜெட் தொடர்பான பணிகள் தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் ஓய்விற்காக கோவை சென்றுள்ளார்.

கோவை கணபதியில் இருக்கும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றுள்ள ஓ.பி.எஸ் தற்போது அங்கு சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் போன்ற பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் சில தினங்களுக்கு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து ஓ.பி.எஸ் சிகிச்சை பெற இருக்கிறார். இதன்காரணமாக அங்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4-வது முறையாக புத்துணர்வு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

'2 எம்.எல்.ஏக்களை இழந்து பேரிழப்பில் இருக்கிறேன்'..! கலங்கிய ஸ்டாலின்..!