வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ளவும் பத்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அமெரிக்கா சென்றுள்ளார். 

சிகாகோவில் விமா நிலையத்தை விட்டு இறங்கும் போது வேட்டி சட்டையிலேயே இருந்தார் ஓ.பி.எஸ். அப்போது அங்கு மைனஸ் 2 டிகிரி குளிர். விமான நிலையத்திற்கு உள்ளே அவர் வேட்டி சட்டையில் இருந்ததால் குளிர் அவரை பெரிதாக வாட்டவில்லை. வெளியே வந்தபோது குளிரின் தாக்கத்தை உணர்ந்துள்ளார். 

பிறகு அங்குள்ள குளிரை பற்றி உள்ளூர் தமிழ்சங்க நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகே வேஷ்டி- சட்டைக்கு மேல் முட்டிவரை போட்டுக் கொள்ளும் ஓவர் கோட்டை ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி எடுத்துக்கொடுத்த பின்னர்தான் போட்டுக் கொண்டார்.

நாளை சிகாகோவின், `அமெரிக்கன் மல்டி எத்னிக் கோயலிஷன்’சார்பாக நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்-2019 விழாவில் சிறப்பு விருந்தினராக ஓ.பி.எஸ் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் ஓ.பி.எஸ்க்கு சர்வதேச ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி.யும், ஓ.பி.எஸ். மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கலந்து கொள்கிறார்.