டெல்லியில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும்  போராட்டங்கள்  நடந்து வந்த நிலையில் இன்று இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதில்  போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு   நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகைதந்துள்ள நிலையல்  டெல்லியில் மோதல் ஏற்பட்டுள்ளது  பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது . இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை  பதிவேடு உள்ளிட்ட குடியுரிமை சட்டங்களை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் அதேபோல் குடியுரிமை சட்ட  திருத்தத்திற்கு ஆதரவான  போராட்டங்களும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் டெல்லி ஜப்ராபத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்களும் இந்திய  குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கும்  இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது . இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அப்பகுதியில் அதேபோன்ற ஒரு மோதல் ஏற்பட்டது .  இதில் மாஜ்பூர் மற்றும் ஜப்ராபாத் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர் இதில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்தை போராட்டக்காரர்கள் தீவைத்தனர் அதேபோல் ஜப்ராபாதி பகுதியில் ஒருவர் போலீஸ்காரரை நோக்கி  துப்பாக்கியால் சுட்டார் . 

 

இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தடியடி  நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர் .  இதில் ஒரு துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது  இதேபோல் பஜன்பூரா பகுதியிலும்  மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .  இந்த சம்பவத்தால்  வடகிழக்கு  டெல்லியில் பதற்றம்  நிலவுகிறது ஜாப்ராபாத் , மாஜ்பூர்  பார்பர்பூர் ,  மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன . இந்நிலையில் டெல்லியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்ததால் இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை  அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு உளவுத்துறை  தகவல் தெரிவித்துள்ளது .  இருவரும் அகமதாபாத்திலிருந்து உடனேயே டெல்லி திரும்புகிறார்கள். அமெரிக்க அதிபர் வந்துள்ள நிலையில் தலைநகரில் ஏற்பட்டுள்ள மோதல் பாதுகாப்பை கேள்விகுறியாக்கிஉள்ளது.