சசிகலா புஷ்பா எம்.பி. தொடர்ந்த வழக்கில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தமிழக எம்.பி. சசிகலா புஷ்பாவின் மரியாதையை குலைக்கும் வகையி்ல் அடையாளம் தெரியத சிலர் பதிவேற்றம் செய்துள்ள தரக்குறைவான வீடியோக்கள், மார்பிங் புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று  பேஸ்புக், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சசிகலா புஷ்பா தரப்பில் அவரின் வழக்கறிஞர் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் குறித்த யுஆர்எல் விவரங்களையும், புகைப்படங்களையும், வீடியோ ஆதாரங்களையும் நீதிபதி யோகேஷ் கண்ணாவிடம் நேற்று அளித்தார். இதையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். 

சசிகலா புஷ்பா எம்.பி. குறித்து யாரும் தவறான புகைப்படங்கள், மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று பேஸ்புக், கூகுள் இந்தியா, டவிட்டர், யூடியூப் ஆகியவற்றுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அந்த வீடியோக்கள் அனைத்தையும் நீக்க இப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சசிகலா புஷ்பா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பவூக் சவுகான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: அதிமுக தலைவர் தன்னை கன்னத்தில் அறைந்தால், உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் சசிகலா புஷ்பா புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா தனது வீட்டில் வேலை செய்த இரு பெண்களை பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கினார் என்ற போலியான புகார் தரப்பட்டு, அவரின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். 

அதன்பின் இந்த கைது நடவடிக்கையில் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் சசிகலா புஷ்பா நிவாரனம் பெற்றார். இந்நிலையில், கடந்த 2016, செப்டம்பர் 19-ம் தேதி, சசிகலா புஷ்பா தனது எம்.பி.க்கு அடையாளம் தெரியாத சிலர் தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால், அவர் குறித்த மோசமான புகைப்படங்களையும், மரியாதையை குலைக்கும் வகையிலான படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என அடையாளம் தெரியாத சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். 

ஆதலால், சசிகலா புஷ்பா குறித்த எந்தவீடியோ, படங்களையும் பதிவேற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம், சசிகலா புஷ்பா எம்.பி. குறித்து யாரும் தவறான புகைப்படங்கள், மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று பேஸ்புக், கூகுள் இந்தயா, டவிட்டர், யூடியூப் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில், சசிகலா புஷ்பா குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வலம் வருவதையும், அதன் யூஆர்எல்கள் பட்டியலையும் சசிகலா புஷ்பா தரப்பில் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்டியலைப் பெற்றுக்கொண்ட நீதிபதி யோக்கேஷ் கண்ணா, சசிகலா புஷ்பா குறித்த வீடியோக்கள், புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று பேஸ்புக், கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் கண்ணா வீடியோக்களை வெளியிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு, மேலும் நீக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் 2019, ஜனவரி 14-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.