Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கவலைக்கிடம்.. தொடர்ந்து செயற்கை சுவாசம்.. அதிர்ச்சியில் முதல்வர்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Delhi Health Minister Satyendar Jain oxygen support after his lung infection increases
Author
Delhi, First Published Jun 19, 2020, 3:35 PM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனாவின் கட்டுப்பாட்டில் தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. டெல்லியில் இதுவரை  49,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,969 உயிரிழந்துள்ளனர். 21,341 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் கலந்து கொண்டிருந்தார். 

Delhi Health Minister Satyendar Jain oxygen support after his lung infection increases

பின்னர், திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் உடனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 24 மணிநேரத்திற்கு பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில்  அமைச்சர் சத்யேந்திர ஜெயின்னு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

Delhi Health Minister Satyendar Jain oxygen support after his lung infection increases

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios