Asianet News TamilAsianet News Tamil

Shocking news-தலைநகர் டில்லியில் பிணக்குவியல்..!! அடக்கம் செய்யமுடியாமல் திணறும் ஊழியர்கள்..!!

கொரோனாவால் இறந்தவர்களில் நாளொன்றுக்கு 95 பேரின் உடல்களை மட்டும் தகனம் செய்ய முடியும், ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது, 

Delhi corporation struggling to funeral for dead body of corona
Author
Delhi, First Published Jun 14, 2020, 10:13 AM IST

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமாக, நாட்டின் தலைநகர் டில்லியில் அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு அங்குள்ள தகன மையங்களில் சடலங்கள் குவிந்துவருகின்றன. குறிப்பாக பஞ்சாபி பாக் தகன மையத்தில் குவிந்த சடலங்களை, நிகாம்போத் காட் தகன மையத்திற்கு திருப்பி அனுப்பும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைராஸ் வேகமாக பரவிவருகிறது இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3,21,626 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 9,199 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் கிடுகிடு என முன்னேரி இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் நோய் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது, அதிக நோய்பாதித்த மூன்றாவது மாநிலமாக டில்லி இருந்துவருகிறது. 

Delhi corporation struggling to funeral for dead body of corona

இந்நிலையில் டில்லியில் வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால் சடலங்களை தகனம் அல்லது அடக்கம்  செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. தெற்கு டில்லி மாநகராட்சி அதிகாரி பூபேந்திர குப்தா என்பவர் இது குறித்து கூறுகையில், பஞ்சாபி பாக் தகன மையத்தில் ஏற்கனவே 65 உடல்கள்  இருந்தன, வியாழக்கிழமையன்று மேலும் 75 உடல்கள் வந்தன, இறந்தவர்களின் உறவினர்களை காத்திருக்க வைக்கக் கூடாது என்பதால் அந்த உடல்கள் நிகாம்போத் காட் தகன மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று 48 உடல்கள், செவ்வாய்க்கிழமை 65 உடல்கள், புதன்கிழமை 65 உடல்கள் பஞ்சாபி பாக் மையத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார், அதேபோல் டில்லியில் உள்ள மிகப்பெரிய  மருத்துவமனையான லோக் நாயக் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை மட்டும் 34 உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக வந்தன இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள்  செய்வதறியாது திகைத்துப் போயினர்.

Delhi corporation struggling to funeral for dead body of corona

உடற்கூறு ஆய்வு முடிந்தபின் சில உடல்கள் நிகாம்போத் காட், பஞ்ச்குயன் சாலை, மற்றும் மங்கோல்பூரியில்  உள்ள தகன மையங்களுக்கு அனுப்பப்பட்டன. 4 உடல்கள் ஐ.டி.ஓ-வில்  உள்ள மயானத்திற்கு அனுப்பப்பட்டன, தற்போது 23 உடல்கள் சவக்கிடங்கில் உள்ளன என்று மருத்துவமனை சவக்கிடங்கின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் இறந்தவர்களில் நாளொன்றுக்கு 95 பேரின் உடல்களை மட்டும் தகனம் செய்ய முடியும், ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது, இதனாலேயே பஞ்சாபி பாக் தகன மையத்தில் இடமில்லாததால் நிகாம்போத் காட் தகன மையத்திற்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. டில்லியில் 13 தகனம் மையங்கள், 4 கல்லறைகள் மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, இவற்றில் 6 தகன மையங்கள் 4 அடக்கஸ்தலம், ஒரு கல்லறை ஆகியவை கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி நிகழ்ச்சி செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. டில்லியில் மட்டும் இதுவரை கொரோனாவால் 1, 214 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios