குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த பகுதியில் போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்யுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் என்னதான் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் காவல்துறை முழுவதும் மத்திய அரசின் (உள்துறை அமைச்சகத்தின்) கட்டுப்பாட்டில் உள்ளது .  இந்நிலையில் மாநில அரசால் சட்ட ஒழுங்கை சரிவர பாதுகாக்க இயலவில்லை .  எனவே  காவல்துறையை மாநில அரசின் கீழ் ஒப்படைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டெல்லியில் இந்திய குடியுரிமை சட்ட ஆதரவு, எதிர்பு குழுவினருக்கிடையே ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்ட பகுதி எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் .  பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் வடகிழக்கு டெல்லியை சேர்ந்த மக்கள் அமைதி காக்க வேண்டும் ,  

வன்முறையால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வன்முறையை  ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது .  போராடுவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவோரை எல்லையில் தடுத்து கைது செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  டெல்லி மாநில எல்லை கண்காசிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்நிலையில்  காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இதேபோல் வன்முறை வெடித்த பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை ,  உரிய பாதுகாப்பு  நடவடிக்கைகளும் இல்லை .  மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைக்காததால் ,  போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனக் கூறினார் . அதேபோல் டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார் .  இதில் டெல்லி துணைநிலை கவர்னர் அணில் பைஜால் ,  முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ,  மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .