பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட விதம் அரசியல் விமர்சகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


வடிவேலு பாணியில் கெஜ்ரிவால்

நடிகர் வடிவேலு நடித்த படங்களிலேயே மக்களை மிகவும் ரசிக்க வைத்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் அரசராக இருக்கும் வடிவேலுவிடம் புலவர் ஒருவர் கவிதை பாட வருவார். அப்போது அந்த புலவர் கவிதையை சொல்ல தொடங்கும் முன் அரசர் வடிவேலு, பலவித கோணங்களில் அமர்ந்து தன் ட்ரேட்மார்க் ஸ்டைலில் ”கூறும்...” என புலவரிடம் கூறுவார். கிட்டத்தட்ட அதே போலத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டதாக நெட்டிசன்கள் கலாய்த்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

விசித்திரமாக போஸ் கொடுத்த கெஜ்ரிவால்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களோடு பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது பல்வேறு மாநில முதல்வர்கள் ஆர்வத்தோடு பிரதமர் மோடி கூறிய கருத்தை கேட்டுக்கொண்டிருந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வித, விதமான போஸ்களில் ஆலோசானையை கவனித்தார். அந்த படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் பரவிவருகிறது.

கெஜ்ரிவால் செயலுக்கு கண்டனம்.. ட்ரெண்டாகும் #MannerlessCM

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் அரவிந்த கெஜ்ரிவால், தலையில் கை வைப்பதும், கன்னத்தில் கை வைப்பதும், டேபிளில் குனிவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் இந்த புகைப்படத்தை பதிவிட்ட பலர் ஒழுங்கீனமான முதல்வர் என விமர்சித்து #MannerlessCM என்ற ஹேஷ் டேக்கில் கண்டன பதிவிட்டு வருகின்றனர்.

Scroll to load tweet…

ஏற்கனவே இதே போன்று மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில், தான் பேசும்போது அந்த காட்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். இதனை நேரலையிலேயே பிரதமர் மோடி கண்டித்தார். அப்போது தனது செயலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தற்போது மீண்டும் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது குடியரசுத் தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பல பதிவுகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.