உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்தவர்களை உதைக்க வேண்டும் என அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு 3 அவதூறு வழக்குகளை தொடர்ந்தது. 

இதையும் படிங்க;-  மண்டியிட்டு பிழைக்கும் உங்களைத்தான் நாய் என்று அழைக்க வேண்டும்... திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக..!

அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4-ம் தேதிகளில் ஆஜராகும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையும் படிங்க;- இஸ்லாமியர்களை தூண்டுவிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுக முயற்சி... பகீர் கிளப்பும் இல.கணேசன்..!

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் தன்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால், மேலும், பிப்ரவரி 24-ல் ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு தடை கோரியும், விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.