பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 

டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. ஹெச்.ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது எனச் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். 

* 1967-ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது திமுகவால் என்பதை மறந்து விட வேண்டாம்.

* 1971-ம் ஆண்டு 'காஷ்மீரத்து பாப்பாத்தி' என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் திமுக ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்துவிட்டதா திமுக?

* 1989-ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம்.ஜி.ஆர் என்ற இருபார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

* 1996-ம் ஆண்டு 'சோ' என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா?

2006-ம் ஆண்டு நான் 'பூணூல் அணிந்த பார்ப்பனன்' என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற 'மைனாரிட்டி ' ஆட்சியை திமுகவால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியுமா?

மேலும், 1999-ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009-ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக்கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

 

பதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த 'பார்ப்பனர்களை' நாய்கள் என்று அழைக்கிறீர்களே திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும்? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்? தவறு செய்து விட்டீர்கள் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள் என நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.