deepa says sasikala and ops are same
சசிகலாவும் ஒ.பி.எஸ்ஸும் ஊழல் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும் ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை திறம்பட நடத்தி வருகிறார் ஒ.பி.எஸ் என எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து விலக வைத்ததால் சசிகலாவுக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கினார். அவரைத்தொடர்ந்து சில எம்.எல்.ஏக்களும், எம்.பி.க்களும், முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் அடைந்தனர்.

பின்னர், சசிகலா குடும்ப ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களில் ஒ.பி.எஸ் தரப்பினர் ஈடுபட்டு வந்தனர். அதில் முக்கிய போராட்டமாக ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் களைய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வந்தனர்.
இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் எடப்பாடி முதலமைச்சராகும் வகையில் வழிவகை செய்து வைத்து விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.
மேலும் அவருக்கு உறுதுணையாக துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி சசிகலாவின் அக்காள் மகனான தினகரனை நியமித்துவிட்டு சென்றார்.
அதன்பிறகு சசிகலாவின் பேச்சை கேட்க நேரமில்லாமல் தினகரன் பல்வேறு வகையில் ஆட்டம் போட்டார். அதன் முடிவு தற்போது சசிகலாவால் முதலமைச்சர் பதவிக்கு வந்த எடப்படியே தினகரனை கட்சியை விட்டு விலக்க அமைச்சர்களிடம் ஒப்புதல் கேட்டார்.

அதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதால் தற்போது ஒ.பி.எஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சசிகலாவும் ஒ.பி.எஸ்ஸும் ஊழல் என்ற ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
ஜெயலலிதாவின் மரணத்தை மறைக்க சசிகலாவால் பயன்படுத்தபட்ட துரோக கருவி தான் ஒ.பி.எஸ்.

ஏற்கனவே கதை எழுதி தயாரிக்கப்பட்ட நாடகத்தை திறம்பட நடத்தி வருகிறார் ஒ.பி.எஸ்.
இரட்டை இலையையும் கட்சியையும் முடக்குவதற்கு இவர்களே நாடகம் நடத்தி முடக்கிவிட்டு , தற்போது மத்திய அரசு முடக்கியதாக கூறுவது வீண் புகார்.
கட்சியையும் இரட்டை இலையையும் மீட்க நடவடிக்கை எடுப்போம் என கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தீபா கூறியுள்ளார்.
