முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார். 

புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டுமெனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன்பு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.மேலும், தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் பேரவைகளும் தொடங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் தீபா பேரவை என்ற பெயரில் கட்அவுட், போஸ்டர், பேனர்களை அவரின் ஆதரவாளர்கள் வைத்து வருகின்றனர்.

பல இடங்களில் தீபா ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தீபாவிற்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் தீபா சேவல் சின்னத்தில் போட்டியிடுவர் என தீபா ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் இன்று தீபா தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து உங்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் பணியை நாளை முதல் தொடர உள்ளதாகவும், தொண்டர்களின் எதிர்பார்ப்பு போல் என் பொதுவாழ்வு அமைய இருக்கிறது, உங்களுக்காக நான் இருக்கிறேன் ஆகையால் யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார். இவரின் அறிவிப்பு தீபா ஆதரவு தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டு அதிமுக தொண்டர்களின் ஆதரவு தீபாவிற்கு அளித்து வரும்நிலையில் நாளை எம்.ஜி.ஆர் 100வது பிறந்தாளில் தீபா கட்சி பெயர் முக்கிய தலைவர்கள் ஆதரவு குறித்து வெளியிடுவார் என தெரிகிறது.