திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு திமுகவும், அமமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அநேகமாக நாளை வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பாத்துக் கொண்டிருக்கும் வேலையில் தமிழக அரசியலில் ஷாக் கொடுக்கும் விதமாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவரும் தனது மனைவியான பேபிம்மா போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வரும் 6 ஆம் தேதி சேலத்தில் அறிவிக்க இருப்பதாக எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் கணவருமான மாதுக்குட்டி  கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் மறைவை அடுத்து காலியான தேர்தலாக அறிவிக்கப்பட்ட திருவாரூருக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து, நாடே அல்லோகலப்பட்டு கொண்டிருக்கிறது.  ஒரு பக்கம் ஆளும், கட்சி பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அனைத்தையும் முந்திக்கொண்ட தினகரன் தனது வேட்பாளரை அறிவித்தார். தினகரனின் அறிவிப்பு வெளியான சிலமணி நேரத்தில் திமுகவும் வேட்பாளரை காட்டியது.

கட்சி ஆரம்பித்த தீபா ஆர் கே நகர் இடைத்தேர்தலில் எஸ்கிப் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் மனுதாக்கல் செய்ய லேட்டாக வந்து வேட்பு மனுவை தவறாகவே நிரப்பி கொடுத்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் களத்தில்  அதகளம் பண்ண சரியான நேரம் பார்த்து காத்திருந்த தீபா ஜெயலலிதாவின் நினைவு தினம் அன்று அலாரம் வைத்து காலையிலேயே  கணவர் மாதவனுடன் சமாதிக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து, தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர் கே நகரில் விட்டதை  திருவாரூரில் பிடித்தே ஆகவேண்டும் என தீபாவிடம் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தொண்டர்கள் கோரிக்கை வைத்தார்களாம், அதுமட்டுமல்ல நோட்டாவிடம் தோற்ற பாஜகவே தேர்தலை சந்திக்கும்போது  நாம நின்றால் என்ன தப்பு என சொன்னார்களாம்.   

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தீபாவின் கணவரும் எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மாதவன்  
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதி முடிவு சேலத்தில் 6-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனக் கூறினார். மாதுக்குட்டியின் இந்த அதிர்ச்சித் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.